- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே
பல்லவி
ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்ரம்! - திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்ரம்
அனுபல்லவி
நீத முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் - (2)
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் - (2)
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் - (ஆதி பிதா குமாரன்)
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவர்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவர்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் - ( வானம் மீதிலே )
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
மாற்கு 16:15