வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவர்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவர்

நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் - ( வானம் மீதிலே )


துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் - ( வானம் மீதிலே )

நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன் - ( வானம் மீதிலே )

தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15