வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர் - 2
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - ( பொழிந்திடும் வல்லமை )


2. நித்திய காலம் வாசம் செய்யும்
சத்திய ஆவியை தாரும் - 2
திக்கற்றோனாய் விட்டிடாமல்
தேற்றரவாளனாய் வந்திடும் - ( பொழிந்திடும் வல்லமை )

3. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே - 2
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - ( பொழிந்திடும் வல்லமை )

4. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும் - 2
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் - ( பொழிந்திடும் வல்லமை )

தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15